கும்பக்கரை அருவியில் நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் வருகை கணிசமாக குறைந்துள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கொடைக்கானல் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கும்பக்கரை அருவி,சுற்றுலா பயணிகளை வெகுவாக ஈர்த்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்யும் மழை, இங்கு அருவியாக பெருக்கெடுக்கிறது. தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழையின் அளவு குறைந்துள்ளது. இதனால் கும்பக்கரை அருவிக்கு வரும் தண்ணீர் அளவு கணிசமாக குறைந்து விட்டது. எனவே சுற்றுலா பயணிகளின் வருகையும் குறைந்துள்ளது.