தாளவாடி வனப்பகுதியில் சாலையை கடக்கும் யானைகளை ரசிக்கும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகளை பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
ஈரோடு மாவட்டம் தாளவாடி மற்றும் ஆசனூர் வன பகுதிகளில் பல்வேறு வகையான விலங்குகள் வசிக்கின்றன. இங்குள்ள தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் பொதுமக்கள் விலங்குகளை ஆர்வத்துடன் ரசித்து வருகின்றனர். உணவுக்காக சாலையை கடக்கும் வனவிலங்குகளை அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் கண்டு மகிழ்கின்றனர். விலங்குகளை புகைப்படம் எடுப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ள வனத்துறையினர், வாகனங்களை விட்டு இறங்க கூடாது எனவும் எச்சரித்துள்ளனர்.