கோடை விடுமுறையை கழிக்க வரலாற்று சுற்றுலா தலமான வட்டகோட்டைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அருகே 18 ஆம் நூற்றாண்டில் திருவிதாங்கூர் மன்னரான மார்த்தாண்ட வர்மா காலத்தில் கட்டப்பட்டது, இந்த வட்டகோட்டை சுற்றுலாத் தளம். இங்கு தற்போது கோடை விடுமுறை நாட்களை கொண்டாட ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
தற்போது இந்த கோட்டையை காண வரும் சுற்றுலா பயணிகளுக்கு கட்டணமாக 25 ரூபாய் வசூல் செய்யப்படுகிறது. காலை 8 மணி முதல் மாலை 5 மணிவரை இங்கு வந்து செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் வெயிலின் தாக்கம் தெரியாதவாறு கடல் காற்று குளிர்ச்சியாக வீசுவது சுற்றுலாப் பயணிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.