கோடை விடுமுறையையொட்டி கம்பம் அருகேயுள்ள சுருளி அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் குடும்பத்துடன், தேனி மாவட்டத்தில் உள்ள சுருளி அருவிக்கு சுற்றுலா பயணிகள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். சுருளி அருவியில் மிகக்குறைவான அளவு நீர் வரத்து இருந்தாலும், வரிசையில் நின்று குளித்து செல்கின்றனர். சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்லும் சூழல் நிலவுவதால், இயற்கை அழகை ரசிக்க முடிகிறது எனவும் தெரிவித்தனர். இந்த கோடை சீசனை ஒட்டி, சுருளி அருவிக்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், அப்பகுதியில் உள்ள சிறுவியாபாரிகளின் விற்பனை அதிகரித்துள்ளது.