கொடைக்கானல் வெள்ளி நீர் வீழ்ச்சி பூங்காவில், சுற்றுலா பயணிகளை உள்ளே செல்ல அனுமதிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மலைகளின் இளவரசியான கொடைக்கானலில், முக்கிய சுற்றுலா தளமாக வெள்ளி நீர் வீழ்ச்சி விளங்குகிறது . ஆரம்பத்தில் இந்த நீர்வீழ்ச்சி அருகே சென்று பார்க்க முடியாம் இருந்த நிலையில், அதன் அருகே செல்லும் வகையில் பூங்கா அமைத்தும், புகைப்படம் எடுக்கும் வகையிலும், 28 லட்சம் ரூபாய் மதிப்பில் புதுபிக்கப்பட்டுள்ளது. ஆனால், பணிகள் முடிவடைந்தும், சுற்றுலா பயணிகளை உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் சாலையின் இரு ஒரங்களில் இருந்து நீர் வீழ்ச்சியினை கண்டு, ரசித்து செல்கின்றனர். இந்த காரணத்தால், அப்பகுதியில் போக்குவத்து நெரிசல் அதிகமாக காணப்படுவதோடு, சாலையில் குறுக்கே சுற்றுலா பயணிகள் செல்வதால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. இதனால், வெள்ளி நீர்வீழ்ச்சி பூங்காவிற்குள் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க, கொடைக்கானல் நகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டுமென சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.