உதகையிலிருந்து கேத்தி வரை இயக்கப்படும் சிறப்பு மலை ரயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம், உதகையில் கோடை சீசனையொட்டி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 2 முறை இயக்கப்பட்ட சிறப்பு மலை ரயில், சுற்றுலா பயணிகளின் வசதிக்காக திங்கள் கிழமை முதல் வாரத்தின் அனைத்து நாட்களிலும் இயக்கப்படுகிறது. மேலும், தினமும் 3 முறை இந்த ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதனிடையே, வார விடுமுறை நாட்கள் மட்டுமல்லாது, மற்ற நாட்களிலும் சிறப்பு மலை ரயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. நூறு வருடங்களை கடந்து ஓடிக் கொண்டிருக்கும் மலை ரயிலில் பயணிப்பது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக சுற்றுலா பயணிகள் தெரிவித்து உள்ளனர்.