தொடர் விடுமுறை என்பதால் கன்னியாகுமரி மாவட்டம் பத்மனாபபுர அரண்மனையில் சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
தக்கலை அருகே அமைந்துள்ள இந்த அரண்மனை மாவட்டத்தின் முக்கியமான சுற்றுலா தளங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்த அரண்மனையைக் காண உள்ளூர் மட்டுமின்றி வெளிமாநில மற்றும் வெளிநாடு சுற்றுலா பயணிகளும் வருகை தருகின்றனர். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தொடர்ச்சியாக விடுமுறை என்பதால் அரண்மனையில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. மன்னர்கள் ஆட்சிக் கால கட்டிட கலையில் அமைந்துள்ள இந்த அரண்மையானது காண்பதற்கு பிரம்மிப்பாக இருப்பதுடன் மன்னர்கள் கால பொருட்களையும், சிற்பங்களையும் காண மகிழ்ச்சியாக இருப்பதாகவும் சுற்றுலா பயணிகள் கூறுகின்றனர்.