குற்றால அருவிகளில் இரவு நேரங்களிலும் ஆனந்த குளியல் போடும் சுற்றுலாப்பயணிகள்

நெல்லை மாவட்டம் குற்றால அருவிகளில் இரவு நேரங்களிலும் சுற்றுலாப் பயணிகள் ஆனந்த குளியல் போட்டு மகிழ்ந்தனர்.

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால், குற்றாலம் ஐந்தருவி, புலியருவி, பழைய குற்றாலம் என அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதனையடுத்து குற்றால அருவிகளில் சீசன் களைக்கட்ட துவங்கியது. இந்த நிலையில், சுற்றுலா பயணிகள் இரவு நேரங்களிலும் அருவிகளில் குளித்து மகிழ்ந்து வருகின்றனர். இரவில் மின் ஒளி விளக்கில் அருவி பால் போல காட்சி தருவதும், ஆர்ப்பரித்து கொட்டும் நீரின் சத்தம் அருவியை மேலும் அழகுற செய்கிறது.

Exit mobile version