ஜம்மு-காஷ்மீரில் பனிப்பொழிவு துவங்கியது – சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

ஜம்மு காஷ்மீரில் பனிப்பொழிவு துவங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் ஆண்டுதோறும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் பனிப்பொழிவு நிலவுகிறது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை புரிவார்கள். தீவிரவாதிகளின் தாக்குதல் சம்பவங்களில் சமீப காலங்களில் வருகை குறைந்துள்ள போதிலும், ஆண்டுதோறும் கணிசமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச், தோடா உள்ளிட்ட பகுதிகளில் பனிப்பொழிவு துவங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகள் மற்றும் சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Exit mobile version