மேட்டூர் அணை பூங்காவில் சுற்றுலாப் பயணிகளால் குவிந்தனர்

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் சுற்றுலா வரும் பயணிகளின் வசதிக்காக அமைந்துள்ள பூங்காவானது வார விடுமுறை நாட்களில் நிரம்பி வழிவது வழக்கம்.

இந்த நிலையில் மேட்டூர் அணை பூங்காவில் வார விடுமுறையான 2 நாட்களில் சுற்றுலாப் பயணிகள் வருகையால் அதிக வருவாய் கிடைத்துள்ளதாக பொதுப்பணித் துறை தெரிவித்துள்ளது. இந்த பகுதியில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வண்ணம் அதிக பொழுதுபோக்கு சாதனங்கள் உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் வந்து செல்கின்றனர். இந்தநிலையில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகையால் நுழைவுக் கட்டணமாக 45 ஆயிரம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version