பிளவக்கல் பெரியார் அணை பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத்துறை அனுமதியளித்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் பிளவக்கல் பெரியார் அணை அமைந்துள்ளது. இந்த பகுதி மாவட்டத்தின் முக்கிய அணையாகவும் , சுற்றுலா தளமாகவும் உள்ளதால் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வருகை தருகின்றனர். இதனிடையே யானைகள் சுற்றி திரிந்ததால் பிளவக்கல் பெரியார் அணை பகுதிக்கு சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் செல்ல வனத்துறை தடை விதித்திருந்தது. இந்நிலையில் காட்டு பகுதிக்குள் யானைகள் சென்றுவிட்டதால் பிளவக்கல் பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.