குமரியில் மேகமூட்டம் காரணமாக சூரிய உதயம் தெரியாததால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் மேகமூட்டம் காரணமாக சூரிய உதயம் தெரியாததால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர்.

கன்னியாகுமரிக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலிருந்து தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கன்னியாகுமரியின் தனிச்சிறப்பான சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்தை ஒரே இடத்திலிருந்து காணலாம் என்பதால் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் அதிகாலை முதலே சூரிய உதயத்தைக் காண முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கம பகுதியில் காத்திருந்தனர். ஆனால் இன்றும் கடற்கரை பகுதி மேக மூட்டமாக காணப்பட்டதால் சூரியன் தண்ணீரிலிருந்து உதயமாகி வருவது தெரியவில்லை. இதனால் சுற்றுலாப்பயணிகள் சூரிய உதயத்தை பார்க்க முடியாமல் ஏமாற்றடைந்தனர்.

Exit mobile version