சுருளி அருவியில் நீர் வற்றியதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

கம்பம் சுருளி அருவியில் நீர்வரத்து இல்லாத காரணத்தால் அங்கு வரும் சுற்றுலா பயணிகள் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளனர்

தேனி மாவட்டம் கம்பத்தில் போதிய கனமழை இல்லாததால், இங்குள்ள சுருளி அருவிக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. கடந்த சில மாதங்களாக மழை பொழிந்து வந்ததால், நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்திருந்தது. இந்த நிலையில், தற்போது மழை பெய்யாததால், அருவியில் நீர்வரத்து இல்லை. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து விட்டதால், சாலையோர கடை வியாபாரிகளும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

Exit mobile version