ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால் அரிச்சல்முனை கடற்கரையில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
தனுஷ்கோடி பகுதியில் நேற்று 55 கிலோ மீட்டர் வேகத்தல் புழுதி காற்று வீசியது. இது மட்டும் இன்றி வழக்கத்திற்கு மாறாக கடல் அதீத சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால், சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி குளிக்க நேற்று முதல் தடை விதிக்கப்பட்டது. கோடை விடுமுறை, கொண்டாட குடும்பத்துடன் அரிச்சல்முனை கடற்கரைக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள், கரையோரம் நின்று கடலை வேடிக்கை பார்த்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.