நெல்லையில் உள்ள குற்றாலம் சிற்றருவியில் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தென்காசியில் குற்றாலம் ஐந்தருவி அருகில் உள்ள சிற்றருவி பேரூராட்சியின் வசம் இருந்ததால் குளிக்க அனுமதி வழங்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில், தற்போது வனத்துறை பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து சுற்றுலா பயணிகள் கட்டணம் செலுத்தி அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை கட்டண குளியல் அனுமதிக்கப்படுகிறது. இதனால், சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் சிற்றருவி நோக்கி படையெடுத்து வருகின்றனர். ஆண்கள், பெண்கள் என இருப் பாலருக்கும் தனித்தனியே குளிக்கும் இடங்கள் பிரித்து அமைக்கப்பட்டுள்ளது.