பள்ளிகள் திறப்புக்கு பின்பும் காட்டேரி பூங்காவில் குவியும் சுற்றுலா பயணிகள்

கோடை விடுமுறை நிறைவடைந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையிலும், குன்னூர் காட்டேரி பூங்காவில் சுற்றுலா பயணிகளின் வருகை தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே தோட்டக்கலைத்துறை நிர்வாகத்தின் கீழ், காட்டேரி பூங்கா அமைந்துள்ளது. இயற்கை சூழலில் அமைந்துள்ள இந்த பூங்காவில், கோடை சீசனுக்காக நடப்பட்ட மேரி கோல்டு, சால்வியா, பிளாக்ஸ், டேலியா, பேன்சி செல்லோஷியா உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட மலர்ச்செடிகளின் 2 லட்சம் நாற்றுக்கள் நடவு செய்யப்பட்டன. அவற்றில் பெரும்பாலான மலர்ச் செடிகள், சீசன் முடிந்தும் தற்போது பூத்து குலுங்குகின்றன. பூங்காவை சுற்றி பசுமையான மலைகள், தேயிலை தோட்டம் போன்றவை, சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. பள்ளி விடுமுறை முடிந்து மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையிலும், நீலகிரி மாவட்டத்தில் இதமான சீதோஷ்ண நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இதனால் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் புல்வெளியில் விளையாடியும், பூக்களுக்கு இடையே செல்பி எடுத்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Exit mobile version