கொடைக்கானலில் ஜூன் முதல் வாரத்தில் கோடைவிழா மற்றும் மலர் கண்காட்சி நடைபெறும் மாவட்ட ஆட்சியர் வினய் தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் மாவட்ட ஆட்சியாளர் வினய் வெள்ளி நீர்விழ்ச்சி, நகராட்சி அலுவலகம் அருகில் உள்ள கழிப்பறை, ஏரிசாலை, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி துறை சார்பில் உள்ள படகுலம், ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அங்கு இருக்கம் குறைபாடுகளை கண்டு அதனை விரைவில் சரி செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மற்ற சுற்றுலா இடங்களை விட ரோஸ் கார்டனில் பலவகை ரோஸ்கள் நடவு செய்யப்பட்டுள்ளதாகவும், ஒரு நாளைக்கு 2000 முதல் 3000 வரை சுற்றுலாப்பயணிகள் வருவதால், ஒன்றரை லட்சம் ரூபாய் வரை வருவமானம் வந்துள்ளதாக கூறினார்.