நலிந்து வரும் பாரம்பரிய கலைகளை பாதுகாக்கும் வகையில் தஞ்சையில் சுற்றுலா கலை விழா நடைபெற்றது.
நலிந்து வரும் பாரம்பரிய கலைகளை பாதுகாக்கும் வகையிலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் வகையிலும் தமிழ்நாடு சுற்றுலா துறை சார்பில் 48 வது கலைவிழா கடந்த ஒரு மாதமாக தஞ்சை ராஜராஜன் மணி மண்டபத்தில் நடைபெற்றது. அதன் நிறைவு விழா தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது, நிறைவு விழாவில் பாரம்பரிய கலைகளான தாரை தப்பாட்டம், மயில் ஆட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.