கூட்டு குடிநீர் குழாயை உடைத்து சட்டவிரோதமாக பயன்படுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை

ராமநாதபுரத்தில், காவிரி கூட்டு குடிநீர் குழாயை உடைத்து, சட்டவிரோதமாக குடிநீரை பயன்படுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் வீரராகவ ராவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வறட்சி காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தின் பல பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியங்களின் சார்பிலும் அந்தந்த பகுதிகளில் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்தநிலையில், காவிரி கூட்டு குடிநீர் குழாய்களை உடைத்து, தோட்டம் வளர்ப்பு உள்ளிட்டவைகளுக்கு சட்டவிரோதமாக குடிநீர் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால், கிராம மக்களுக்கு கிடைக்க வேண்டிய குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுவதாகவும், சட்டவிரோதமாக குடிநீரை பயன்படுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Exit mobile version