10ம் வகுப்பு தேர்வில் மொத்தமாக 95.2% பேர் தேர்ச்சி

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. அதன்படி, 95 புள்ளி 2 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மார்ச் 14 ம் தேதி முதல் 29ம் தேதி வரை நடைபெற்ற தேர்வுகளில், பள்ளி மற்றும் தனித்தேர்வர்கள் என 9 லட்சத்து 76 ஆயிரத்து 19 மாணவர்கள் தேர்வு எழுதினர். இன்று வெளியான முடிவுகளின்படி, 97 சதவீத மாணவியரும், 93 புள்ளி 3 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன்படி, மாணவர்களைவிட 3 புள்ளி 7 சதவீதம் அளவில், அதிக மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டு 6 ஆயிரத்து 100 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி அடைந்துள்ளன. அரசுப் பள்ளி மாணவர்கள் 92 புள்ளி 48 சதவீதமும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 94 புள்ளி 53 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். மெட்ரிக் பள்ளிகளில் 99 புள்ளி 05 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாற்றுத்திறனாளி மாணவர்கள் 4 ஆயிரத்து 816 தேர்வு எழுதியதில், 4 ஆயிரத்து 395 மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். 152 சிறைவாசிகள் தேர்வு எழுதியதில் 110 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. பாடவாரியாக மாணவ மாணவியரின் தேர்ச்சி விகிதத்தை பார்ப்போம்.

பத்தாம் வகுப்பு தேர்வில் 95.2 சதவீத மாணவ மாணவியர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மொழிப்பாடத்தில் 96.12 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆங்கில பாடத்தில் 97.35 சதவீதம் பேரும் கணித பாடத்தில் 96.46 சதவீதம் பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். அறிவியல் பாடத்தில் 98.56 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். சமூக அறிவியல் பாடத்தில் 97.07 சதவீத மாணவ மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Exit mobile version