தடகள வீராங்கனையாக மாறிய “டாப்ஸி” – குவியும் பாராட்டுகள்

ஆடுகளம் படம் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை டாப்ஸிக்கு தமிழ் மொழியை விட ஹிந்தி மொழி திரைப்படங்கள் பெரிய அளவில் புகழ்பெற வைத்தன. நேர்கொண்ட பார்வையின் ஒரிஜினல் வெர்ஷனான “பிங்க்” திரைப்படத்தில் கதாநாயகி கூட டாப்ஸி தான்.

இந்தியில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில்நடித்து வருகிறார். கடைசியாக அவர் நடிப்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு “மிஷன் மங்கள்” திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் வசூலிலும் சாதனை புரிந்தது.

இதனைத் தொடர்ந்து “ராஷ்மி ராக்கெட்” என்ற படத்தில் நடிக்கவுள்ளார் டாப்ஸி. இந்த படம் ராஜஸ்தான் மாநிலத்தில் குக்கிராமத்தில் பிறந்து தடகளத்தில் சாதனை புரிந்த வீராங்கனை ஒருவரை பற்றிய கதை ஆகும். இயக்குநர் நந்தா பெரியசாமி எழுதிய கதைக்கு அனிருத்தா குஹா திரைக்கதை எழுத, படத்தை இயக்கியுள்ளார் ஆகார்ஷ் குரானா. 

இதற்காக தனது கெட்டப்பை மாற்றி தடகள வீராங்கனையாக மாறியுள்ளார். இதற்கான மோஷன் வீடியோவை தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். படத்துக்காக அவரது உழைப்பை கண்டு ரசிகர்கள் டாப்ஸியை பாராட்டி வருகின்றனர்.

Exit mobile version