விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் : போராட்டக்காரர்களிடம் அமைச்சர் தங்கமணி பேச்சு

விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளிடம் அமைச்சர் தங்கமணி பேச்சுவார்த்தை நடத்தினார். விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திவரும் விவசாயிகளிடம் தமிழக மின்சார வாரிய துறை அமைச்சர் தங்கமணி, பள்ளிபாளையம் பயணியர் மாளிகையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

கொங்கு ராஜாமணி தலைமையில் கலந்து கொண்ட விவசாயிகள், நாடாளுமன்ற தேர்தல் முடிவும் வரை தங்களின் போராட்டத்தை நிறுத்திக் கொள்வதாக தெரிவித்தனர். அதேவேளையில், விவசாயிகள் சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் s பெருமாள் தலைமையிலான விவசாயிகள் உண்ணாவிரதத்தை கைவிட மறுத்ததால் பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கமணி, நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பால், கொள்கை முடிவு எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Exit mobile version