பாகிஸ்தான் மற்றும் சீனாவில் வசிப்பவர்களின் சொத்துக்களை எதிரி சொத்துகள் சட்டத்தின்கீழ் விற்பனை செய்வதற்காக உயர்மட்ட குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.
சுமார் ரூ.3000 கோடி மதிப்புள்ள இந்த சொத்துக்கள் பிரிவினையின் போது இங்கிருந்து குடியேறியவர்களுக்கு சொந்தமானதாகும். இந்த சொத்துக்களை விற்பனை செய்யும் வகையில் எதிரி சொத்துக்கள் சட்டத்தில் மத்திய அரசு இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருத்தம் கொண்டு வந்தது. தற்போது அமைக்கப்பட்டுள்ள உயர்மட்டக் குழு இந்த சொத்துக்களை விற்பனை செய்வதற்கான பணிகளை மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.