அதிக சத்தம் எழுப்பும் பட்டாசுகளுக்கு தடை: மாசு கட்டுப்பாட்டு வாரியம்

அதிக சத்தம் எழுப்பும் பட்டாசுகளுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தீபாவளி பண்டிகை வரும் 27ம்தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், பட்டாசுகளால் ஏற்படும் காற்று, ஒலி மாசு ஆகியவற்றை கட்டுப்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு உட்பட்டு பட்டாசுகளை விற்பனை செய்ய மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியது. மேலும், தீபாவளி பண்டிகைக்கு ஒரு வாரம் முன்பு பல்வேறு இடங்களில் காற்றில் உள்ள மாசின் அளவு கணக்கிடப்படும் என்றும் தீபாவளியன்று காற்றிலுள்ள நச்சுத்தன்மை அளவிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், 125 டெசிபல் அளவுக்கு மேல் சத்தம் எழுப்பக்கூடிய பட்டாசுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. அதன்படி, அதிக சத்தம் எழுப்பும் பட்டாசு விற்பனை செய்வது தெரிய வந்தால், பட்டாசுகளை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version