நியூசிலாந்து அணியிடம் இந்திய அணி டி20 போட்டியில் மட்டும் தடுமாறி வருகிறது. இதுவரை, 10 டி20 ஆட்டங்களை நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்தியா விளையாடியுள்ளது. இதில் 7 ஆட்டங்களில் தோல்வி அடைந்துள்ளது 3 ஆட்டங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மேலும் இவ்வகையான போட்டியில் மட்டும், நியூசிலாந்து அணியிடம் மோசமான ரெகார்டுகளை இந்தியா வைத்துள்ளது. அவற்றை இங்கு காணப்போம் …
1.முதல் டி20 உலக சாம்பியான இந்தியா, 2007ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரில் ஒரே ஒரு தோல்வி மட்டும் அடைந்துள்ளது, அது நியூசிலாந்து அணியிடம் தான்.
2.அதன் பிறகு 2008ஆம் ஆண்டு நியூசிலாந்து மண்ணில் நடைபெற்ற 2 டி20 போட்டியிலும் தோல்வி அடைந்துள்ளது.
3.2012ஆம் ஆண்டு நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, நடைபெற்ற டி20 தொடரில் ஒரு போட்டியில் கூட இந்திய வென்றதில்லை.
4.அதன் பின் 2016ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில், இந்திய அணி தனது முதல் ஆட்டத்திலேயே நியூசிலாந்திடம் படுதோல்வி அடைந்தது. வெறும் 129 ரன்கள் சேஸ் செய்ய முடியாமல் வெறும் 79 ரன்களில் நியூசிலாந்திடம் சுருண்டது இந்தியா.
5.2017ஆம் ஆண்டு இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணி 3 டி20 போட்டியில் விளையாடியது. அதில் இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது.
6. இதுவே நியூசிலாந்து அணிக்கு எதிராக முதல் முறையாக இந்தியா வென்றது ஆகும்.
7.முதல் டி20 உலக சாம்பியான இந்தியா நியூசிலாந்திடம் முதல் டி20 போட்டியை வெற்றி பெற 10 ஆண்டுகள் எடுத்துக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
8.தற்போது நடைபெற்று வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரின் முதல் போட்டியில் 80 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதுவே இந்தியாவின் டி20 போட்டியின் மிக மோசமான தோல்வியாகும் (defeat by most runs in t20).ஆனால் அடுத்த போட்டியில் இந்தியா சிறப்பான வெற்றி பெற்று அசத்தியுள்ளது.
விளையாட்டில் வெற்றியும், தோல்வியும் சகஜம் என்ற நிலையில் இந்திய அணி நாளை போட்டியில் வென்று ரசிகர்களை சந்தோஷப்படுத்தும் என நம்பலாம். ஒருவேளை நாளை போட்டியில் தோற்கும் பட்சத்தில் இந்தியா ஒரு சாதனையை இழந்து விடும். அதவாது கடைசியாக நடைபெற்ற 6 டி20 தொடரிலும் இந்தியா தொடர்ச்சியாக வென்றுள்ளது. தோற்றால் அந்த சாதனை பறிப் போகிவிடும். பாகிஸ்தான் அணி 9 டி20 தொடரை தொடர்ச்சியாக வென்றதே உலக சாதனையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.