நாளை திருக்கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் தயார்!

திருவண்ணாமலையில் ஆண்டுதோறும் நடைபெறும் திருக்கார்த்திகை தீப திருவிழாவில் மகா தீபம் ஏற்றப்படும் கொப்பரை, பூஜைகளுடன் மலை மீது கொண்டு செல்லப்பட்டது.

அண்ணாமலையார் கோயிலில் கடந்த 1ம் தேதி திருகார்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையடுத்து நாளை அண்ணாமலையார் கோயிலில் அதிகாலை 4 மணியளவில் பரணி தீபம் ஏற்றப்பட உள்ளது. இதன் பின்னர் மாலை 6 மணிக்கு 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள மலையின் மீது மகா தீபம் ஏற்றப்படும். இதனை காண தமிழகம் மட்டுமல்லாது,வெளி மாநிலங்களில் இருந்தும் 25 லட்சத்திற்க்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தர உள்ளனர். இந்நிலையில், தீபம் ஏற்றப்படும் 175 கிலோ எடை கொண்ட தீப கொப்பரையானது, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மலை மீது எடுத்து செல்லப்பட்டது. 11 நாட்கள் ஏற்றப்படும் இந்த மகாதீபத்திற்க்கு தோராயமாக 7 ஆயிரத்து 150 கிலோ நெய், 22 கிலோ கற்பூரம் மற்றும் ஆயிரத்து 200 மீட்டர் காடா துணியும் பயன்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version