தமிழக பட்ஜெட் நாளை தாக்கவுள்ள நிலையில், முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை காலை 10 மணிக்கு தொடங்குகிறது. இதில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 2020-2021-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். நாளைய பட்ஜெட்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்குதல் உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. குடிமராமத்து பணிக்கு வரவேற்பு உள்ளதால் இந்த பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களான தென்காசி, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கும் இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.