நடிகர் பிரபாஸுக்கு நாளை special Day…ஏன் தெரியுமா?

உலக அளவில் மிகவும் வெற்றிப்பெற்ற படமான பாகுபலி திரைப்படத்தில் பிரபாஸ்,ராணா,தமன்னா,அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்தனர்.அதில் பாகுபலியாக நடித்த பிரபாஸ் பாகுபலி கதாபாத்திரத்திலேயே வாழ்ந்துவிட்டார்.அவரின் நடிப்புக்கு தனி ரசிகர் பட்டாளமே உருவாகியது.

இந்நிலையில் இன்று பிரபாஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்..’ஹலோ..டார்லிங்ஸ்..நாளைக்கு உங்களுக்காக ஒரு சர்ப்பிரைஸ் காத்திட்டு இருக்கு,மறக்கமாக நாளைக்கு என்னோட இன்ஸ்டாகிராம் பாருங்க’ என கூறியிருக்கிறார்.

’சாஹோ’ திரைப்படத்தில் பிரபாஸ் நடித்து வரும் நிலையில், இந்த வீடியோ வெளியிட்டு இருப்பது, நாளை பிரபாஸ் சாஹோ படத்தினை பற்றிய தகவல்களை கூட கூறலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.ஹிந்தி,தெலுங்கு,தமிழ் ஆகிய மூன்று மொழிகளிலும் வெளிவர இருக்கும் இப்படத்தில் ஷ்ரத்தா கபூர், அருண் விஜய் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.மேலும் இப்படம் ஆகஸ்ட் மாதம் வெளிவரலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

Exit mobile version