இன்ஸ்டாகிராமில் பழகி 40 லட்சம் மோசடி !

கொடுங்கையூர் முத்தமிழ் நகரை சேர்ந்த சித்ராவிற்கும், மகேஷ் குமார் என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் சித்ராவிடம் வங்கிகளில் கடன் பெற்று தருவதாக கூறி மூன்று லட்சம் பணம், நான்கு சவரன் நகையை மகேஷ் குமார் வாங்கியுள்ளார். நீண்ட நாட்கள் ஆகியும் வங்கியில் கடன் பெற்று தராததால் சந்தேகமடைந்த சித்ரா, இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன்பேரில் மகேஷ் குமாரை கைது செய்த காவல்துறையினர் விசாரித்ததில் பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. சித்ரா உட்பட பலரிடம் மகேஷ்குமார் 40 லட்சம் ரூபாய் வரை இதுபோன்று மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Exit mobile version