கல்லறைத் தோட்டத்தினை தூய்மைப்படுத்தும் டென்மார்க் பள்ளி மாணவர்கள்

நாகை மாவட்டம், தரங்கம்பாடி அருகே மிகவும் பழமையான கல்லறைத் தோட்டத்தினை தூய்மைப்படுத்தும் பணியில் டென்மார்க் பள்ளி மாணவர்கள் ஈடுபட்டனர்.

இந்திய கலாச்சாரத்தை அறிந்து கொள்ளவும், கள ஆய்வு பயிற்சி மேற்கொள்ளவும் டென்மார்க் நாட்டு பள்ளி மாணவர்கள் நாகை மாவட்டத்திற்கு வருகை புரிந்துள்ளனர். டேனிஷ் தரங்கம்பாடி அமைப்பு மற்றும் இந்தியா டென்மார்க் கலாச்சார மையம் ஆகியவை இணைந்து, கள ஆய்வு பயிற்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. 400 ஆண்டுகளுக்கு முன் தரங்கம்பாடியில் வசித்த போது இறந்த டேனிஷ் காரர்கள், அங்குள்ள கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில், தரங்கம்பாடி கல்லறை தோட்டத்தினை தூய்மைப்படுத்தும் பணியிலும், கல்லறைக்கு வெள்ளை வர்ணம் பூசும் பணியிலும் டென்மார்க் பள்ளி மாணவர்கள் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து, டேனிஷ் கோட்டை அருங்காட்சியகம், கடல்சார் அருங்காட்சியகம் உள்ளிட்ட பகுதிகளையும் டென்மார்க் மாணவர்கள் பார்வையிட்டனர்.

Exit mobile version