தருமபுரி மாவட்டத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் மாநில அளவிலான தக்காளி கருத்தரங்கு கண்காட்சி நடைபெற்றது
வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண்மை வணிகத்துறை சார்பில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த கண்காட்சியில் தக்காளி சாகுபடி செய்வது குறித்து விளக்கப்பட்டது. இந்தக் கண்காட்சியில் தக்காளி ரகங்கள் காட்சிப்படுத்தப்பட்டு விளக்கம் அளிக்கப்பட்டது.இதில் 5க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டு கருத்தரங்கு கையேட்டை வெளியிட்டு உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் துவக்கி வைத்தார். கூட்டத்தில் பேசிய அவர், தமிழகத்தில் 2 ஆயிரத்து 461 ஏக்கர் பரப்பளவில் 61 ஆயிரத்து 550 மெட்ரிக் டன் தக்காளி உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.