இந்திய பங்கு சந்தைகள் முதல், உலக பங்கு சந்தைகள் வரை அதன் நிலவரம் குறித்து பார்ப்போம்…
மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 37 ஆயிரத்து 350 புள்ளிகளாக உள்ளது. இதேபோன்று, தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி, 11 ஆயிரத்து 47 புள்ளிகளாக உள்ளது.
அமெரிக்க பங்கு சந்தை குறியீடான நாஸ்டேக், 7 ஆயிரத்து 895புள்ளிகளுடனும், லண்டன் பங்கு சந்தை குறியீடான FTSE 7 ஆயிரத்து 117 புள்ளிகளுடனும், பிரான்ஸ் பங்கு சந்தை குறியீடான CAC, 5 ஆயிரத்து 300 புள்ளிகளுடனும் வர்த்தகமாகி வருகிறது.
ஜெர்மனி பங்கு சந்தை குறியீடான DAX, 11 ஆயிரத்து 562 புள்ளிகளுடனும், ஜப்பான் பங்கு சந்தை குறியீடான NIKKEI, 20 ஆயிரத்து 558 புள்ளிகளுடனும் வர்த்தகமாகி வருகிறது. ஹாங்காங் மற்றும் சீன பங்கு சந்தைகளில் வர்த்தகம் தொடங்கி உள்ள நிலையில், ஹாங்காங் பங்கு சந்தை குறியீடான HANG SENG, 25 ஆயிரத்து 734 புள்ளிகளுடனும், சீன பங்கு சந்தை குறியீடான Shaz, 2 ஆயிரத்து 823 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.