இன்றைய பெட்ரோல்,டீசல் விலையில் மாற்றமில்லை

நேற்றைய விலையில் மாற்றமின்றி பெட்ரோல் லிட்டருக்கு 72 ரூபாய் 82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு 68 ரூபாய் 26 காசுகளாகவும் விற்பனையாகிறது.

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றி அமைத்து வந்தன. இதையடுத்து, நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமல்படுத்தப்பட்டது. அதனடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் மாற்றம் இல்லாமல் 72 ரூபாய் 82 காசுகளாகவும், அதேபோல் டீசல் லிட்டருக்கு 68 ரூபாய் 26 காசுகளாகவும் விற்பனையாகிறது.

Exit mobile version