இன்று பயணத்தை ஆரம்பிக்கிறது இந்தியாவின் அதிவேக ரயில்

இந்தியாவின் அதிவேக ரயிலான வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி இன்று துவங்கி வைக்கிறார்.

இந்தியாவின் அதிவேக ரயிலாக அறிவிக்கப்பட்டுள்ள ட்ரெய்ன் 18 என்ற இந்த செமி – ஹைஸ்பீட் ரயில் டெல்லிக்கும் வாரணாசிக்கும் இடையே இயக்கப்பட உள்ளது. இதனை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இன்று கொடியசைத்து துவங்கி வைக்கிறார். இந்தியாவின் அதிவேக ரயிலான இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இரண்டு பயண வகுப்புகளை கொண்டுள்ளது. மணிக்கு 180 கிலோமீட்டர் வரை செல்லும் இந்த ரயிலில், முதல் வகுப்பிற்கு 3 ஆயிரத்து 310 ரூபாயாகவும், 2ம் வகுப்பிற்கு ஆயிரத்து 760 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வகுப்பு வாரியாக உணவு விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version