சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 384 ரூபாய் அதிகரித்து, 36 ஆயிரத்து 592 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கத்தை சந்தித்து வரும் சூழலில், இன்று அதிகரித்து விற்பனையாகிறது. அதன்படி 24 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 48 ரூபாய் அதிகரித்து 4,954 ரூபாய்க்கும், சவரனுக்கு 384 ரூபாய் அதிகரித்து 39,632 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
இதேபோல், 22 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 48 ரூபாய் அதிகரித்து 4,574 ரூபாய்க்கும், சவரனுக்கு 384 ரூபாய் அதிகரித்து 36,592 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
இதேபோல், வெள்ளி கிராமுக்கு ஒரு ரூபாய் 60 காசுகள் அதிகரித்து, 66 ரூபாய் 40 காசுகளுக்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ஆயிரத்து 600 ரூபாய் அதிகரித்து 66 ஆயிரத்து 400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.