முதல்வரின் இன்றைய தேர்தல் பிரசாரம் விபரம்

அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருதுநகர் மற்றும் மதுரையில் இன்று வாக்கு சேகரிக்கிறார். காலை 8 மணிக்கு விருதுநகர் மக்களவை தொகுதி வேட்பாளர் தேமுதிகவின் அழகர்சாமியை ஆதரித்து சிவகாசியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். காலை 9 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் தென்காசி மக்களவை தொகுதி வேட்பாளரும் புதிய தமிழகம் கட்சியின் தலைவருமான கிருஷ்ணசாமிக்கு வாக்கு சேகரிக்கிறார்.

இதை தொடர்ந்து காலை 10மணிக்கு விருதுநகரிலும் 10.30க்கு அருப்புக்கோட்டையிலும் பிரசாரம் மேற்கொள்ளும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தேமுதிகவின் அழகர்சாமிக்கு வாக்கு சேகரிக்கிறார். காலை 11 மணிக்கு கள்ளிக்குடி- காரியாபட்டி சந்திப்பில் ராமநாதபுரம் மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து பேசுகிறார். பின்னர், விருதுநகர் மக்களவை தொகுதி வேட்பாளர் அழகர்சாமிக்கு ஆதரவாக திருப்பரங்குன்றத்தில் பகல் 12 மணிக்கு வாக்கு சேகரிக்கிறார்.

இதை தொடர்ந்து மதுரை செல்லும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மாலை 3.30 மணிக்கு ஜெயம் திரையரங்கு அருகிலும் மாலை 4 மணிக்கு கட்டபொம்மன் சிலை அருகிலும் மதுரை மக்களவை தொகுதி வேட்பாளர் அதிமுகவின் ராஜ்சத்யனுக்கு வாக்கு சேகரிக்கிறார். மாலை 4.30 மணிக்கு கீழவாசல் சிக்னல் அருகேயும் , மாலை 5.30 மணிக்கு செல்லூர் 50 அடி சாலையிலும் வாக்கு சேகரிக்கும் முதலமைச்சர், மாலை 6.30 மணிக்கு கே.புதூர் பேருந்து நிலையம் அருகே நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகிறார்.

இதையடுத்து இரவு 8.30 மணிக்கு ஒத்தக்கடையிலும் 9 மணிக்கு மேலூரிலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்கிறார்.

Exit mobile version