இன்று 3வது டி20 போட்டி: தொடரை வெல்லுமா இந்திய அணி

இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டி20 போட்டி ஹாமில்டனில் இன்று நடைபெறுகிறது.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, முதலில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. ஆக்லாந்தில் நடைபெற்ற முதல் இரண்டு போட்டிகளையும் வென்ற இந்திய அணி, தொடரை 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் இவ்விரு அணிகள் மோதும் 3வது டி20 போட்டி ஹாமில்டன் நகரில் இன்று நடைபெறுகிறது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுல் முதல் இரண்டு போட்டிகளிலும் அரைசதம் அடித்து அசத்தினார்.

அதே போல் இந்திய அணியில் கேப்டன் விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோரும் பேட்டிங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். நியூசிலாந்து அணி இந்த போட்டியில் வெற்றி பெற்ற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகிறது.

இதுவரை, இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து மண்ணில் டி20 தொடரை வென்றதே கிடையாது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று முதன் முறையாக நியூசிலாந்து மண்ணில் தொடரை வென்று சாதனை படைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Exit mobile version