இந்திய மற்றும் உலக பங்கு சந்தைகள் இன்று தொடர் சரிவுடனே வர்த்தகமாகி நிறைவடைந்தன.
மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 503 புள்ளிகள் குறைந்து, 38 ஆயிரத்து 593புள்ளிகளாக வர்த்தகம் நிறைவடைந்தது. இதேபோல், தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி, 148 புள்ளிகள் குறைந்து, 11 ஆயிரத்து 440 புள்ளியாக வர்த்தகம் நிறைவடைந்தது. உலக பங்கு சந்தைகள் இன்று தொடர்ந்து சரிவுடனே வர்த்தகமாகி நிறைவடைந்தன.
அமெரிக்க பங்கு சந்தை குறியீடான நாஸ்டேக் 7 ஆயிரத்து 993 புள்ளிகளுடனும், லண்டன் பங்கு சந்தை குறியீடான FTSE 7 ஆயிரத்து 225 புள்ளிகளுடனும், பிரான்ஸ் பங்கு சந்தை குறியீடான CAC 5 ஆயிரத்து 547 புள்ளிகளுடனும் வர்த்தகம் நிறைவடைந்தது.
ஜெர்மனி பங்கு சந்தை குறியீடான DAX, 12 ஆயிரத்து 173 புள்ளிகளுடனும், ஜப்பான் பங்கு சந்தை குறியீடான NIKKEI, 22 ஆயிரத்து 20 புள்ளிகளுடனும் வர்த்தகம் நிறைவுற்றது. ஹாங்காங் பங்கு சந்தை குறியீடான HANG SENG, 25 ஆயிரத்து 945 புள்ளிகளுடனும், சீன பங்கு சந்தை குறியீடான Shaz, 2 ஆயிரத்து 955 புள்ளிகளுடன் வர்த்தகம் வர்த்தகம் நிறைவடைந்தது.