ட்விட்டரில் ட்ரெண்ட்டிங்-#GoBackStalin

முதலமைச்சரின் கோவை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, GoBackStalin என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட்டிங்கில் உள்ளது.

முதலமைச்சர் ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக கோவை மாவட்டத்துக்கு சென்றார். இதற்காக கோவையில் இன்றும் நாளையும் ட்ரோன்கள் பறக்க தடை, பாதுகாப்பு பணிக்காக 4 ஆயிரம் போலீசார், வ.உ.சி. மைதானத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு என பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கூட வழங்காத நிலையில், கோவை வரும் முதலமைச்சருக்கு, GoBackStalin என்ற ஹேஷ்டேக் மூலம் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர் கோவை மக்கள். கடந்த சட்டமன்ற தேர்தலில் ஏராளமான பொய் வாக்குறுதிகளை கொடுத்து திமுக ஆட்சி அதிகாரத்தை கைபற்றிய போதிலும், கோவை மாவட்டத்தில் திமுகவால் ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியவில்லை.

இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரவிருக்கும் நிலையில், கோவை பக்கம் எட்டி பார்க்கும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஹேஷ்டேக் தேசிய அளவில் ட்ரெண்டிங்கில் இருப்பது திமுகவினருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

 

Exit mobile version