சட்டப்பேரவையில் இன்று கைத்தறி, செய்தித்துறைகளின் மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது

சட்டப்பேரவையில், இன்று கைத்தறி மற்றும் துணிநூல் துறை, செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சு துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது.

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த 28ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவை காலை 10 மணிக்கு கூடியதும், கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்படும். இதை தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் முக்கிய பிரச்சனைகள் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து விவாதம் நடத்துவார்கள். பின்னர் கைத்தறி மற்றும் துணிநூல் துறை, செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சு துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறுகிறது. அமைச்சர்கள் ஓ.எஸ். மணியன், கடம்பூர் ராஜு ஆகியோர் மானியக் கோரிக்கை மீதான கேள்விகளுக்கு பதிலளித்து துறை சார்ந்த அறிவிப்புகளை வெளியிடுகின்றனர்.

Exit mobile version