நீலகிரி மாவட்டம் உதகையில், சீரமைக்கப்பட்ட மத்திய பேருந்து நிலையத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 10.30 மணிக்கு காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கவுள்ளார்.
சர்வதேச சுற்றுலா தளமாக கருதப்படும் உதகையில், கடந்த 8 மாதங்களாக, மத்திய பேருந்து நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்தன.
ரூபாய் 2 கோடி மதிப்பீட்டில், பேருந்து நிலையத்தில் தண்ணீர் தேங்காமல் இருக்க, சிமெண்ட் கற்கள், நவீன மேற்கூரை, பயணிகள் அமரும் இருக்கைகள், தாய்மார்களுக்கான பாலூட்டும் அறை உள்ளிட்டவை, நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ளது.
சீரமைக்கப்பட்ட மத்திய பேருந்து நிலையத்தை, இன்று காலை 10.30 மணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார். இதனை முன்னிட்டு பேருந்து நிலையம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.