நாடு முழுவதும் மானியமில்லாத சிலிண்டர்களின் விலை இன்று முதல் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விலை உயர்வு தொடர்பாக இண்டேன் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்லியில் சிலிண்டரின் விலை 144 ரூபாய் வரை உயர்த்தப்பட்டு 858 ரூபாய்க்கு விற்கப்படுகிறது, கொல்கத்தாவில் 149 ரூபாய் உயர்த்தப்பட்டு 896 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மும்பையில் 145 ரூபாய் வரை உயர்த்தப்பட்டு 829 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதே போல் சென்னையில் 147 ரூபாய் வரை உயர்த்தப்பட்டு 881 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த விலை உயர்வானது, இன்று முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.