இன்றைய பங்கு சந்தைகள் உயர்வுடன் நிறைவடைந்தது

மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 127 புள்ளிகள் உயர்ந்து, 36 ஆயிரத்து 602 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது. இதேபோல், தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி, 35 புள்ளிகள் உயர்ந்து, 10 ஆயிரத்து 853 புள்ளியாக வர்த்தகமாகி வருகிறது. உலக பங்கு சந்தைகள் தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகின்றன.

அமெரிக்க பங்கு சந்தை குறியீடான நாஸ்டேக் 8 ஆயிரத்து 186 புள்ளிகளுடனும், லண்டன் பங்கு சந்தை குறியீடான FTSE 7 ஆயிரத்து 329 புள்ளிகளுடனும், பிரான்ஸ் பங்கு சந்தை குறியீடான CAC 5 ஆயிரத்து 618 புள்ளிகளுடனும் வர்த்தகமாகி வருகிறது.

ஜெர்மனி பங்கு சந்தை குறியீடான DAX, 12 ஆயிரத்து 378 புள்ளிகளுடனும், ஜப்பான் பங்கு சந்தை குறியீடான NIKKEI, 21 ஆயிரத்து 960 புள்ளிகளுடனும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. ஹாங்காங் பங்கு சந்தை குறியீடான HANG SENG,26 ஆயிரத்து 754 புள்ளிகளுடனும், சீன பங்கு சந்தை குறியீடான Shaz, 2 ஆயிரத்து 985 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.

 

 

Exit mobile version