இன்றைய பங்கு சந்தை நிலவரம்

இந்திய பங்கு சந்தைகள் சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன…

மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 272 புள்ளிகள் குறைந்து, 38 ஆயிரத்து 549 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது. இதேபோல், தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி, 85 புள்ளிகள் குறைந்து, 11 ஆயிரத்து 428 புள்ளியாக வர்த்தகமாகி வருகிறது. உலக பங்கு சந்தைகள் தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகின்றன.

அமெரிக்க பங்கு சந்தை குறியீடான நாஸ்டேக் 7 ஆயிரத்து 939 புள்ளிகளுடனும், லண்டன் பங்கு சந்தை குறியீடான FTSE 7 ஆயிரத்து 426 புள்ளிகளுடனும், பிரான்ஸ் பங்கு சந்தை குறியீடான CAC 5 ஆயிரத்து 640 புள்ளிகளுடனும் வர்த்தகமாகி வருகிறது.

ஜெர்மனி பங்கு சந்தை குறியீடான DAX, 12 ஆயிரத்து 380 புள்ளிகளுடனும், ஜப்பான் பங்கு சந்தை குறியீடான NIKKEI, 21 ஆயிரத்து 709 புள்ளிகளுடனும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. ஹாங்காங் பங்கு சந்தை குறியீடான HANG SENG, 26 ஆயிரத்து 88 புள்ளிகளுடனும், சீன பங்கு சந்தை குறியீடான Shaz, 2 ஆயிரத்து 920 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.

Exit mobile version