இன்றைய பங்கு சந்தை நிலவரம்

இந்திய மற்றும் உலக பங்கு சந்தைகள் இன்று சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன…

மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 133 புள்ளிகள் குறைந்து, 38 ஆயிரத்து 180புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது. இதேபோல், தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி, 41 புள்ளிகள் குறைந்து, 11 ஆயிரத்து 319 புள்ளியாக வர்த்தகமாகி வருகிறது. உலக பங்கு சந்தைகளும் இன்று சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன.

அமெரிக்க பங்கு சந்தை குறியீடான நாஸ்டேக் 7 ஆயிரத்து 785 புள்ளிகளுடனும், லண்டன் பங்கு சந்தை குறியீடான FTSE 7 ஆயிரத்து 122 புள்ளிகளுடனும், பிரான்ஸ் பங்கு சந்தை குறியீடான CAC 5 ஆயிரத்து 422 புள்ளிகளுடனும் வர்த்தகமாகி வருகிறது.

ஜெர்மனி பங்கு சந்தை குறியீடான DAX, 11 ஆயிரத்து 925 புள்ளிகளுடனும், ஜப்பான் பங்கு சந்தை குறியீடான NIKKEI, 21 ஆயிரத்து 346 புள்ளிகளுடனும் வர்த்தகமாகி வருகிறது. ஹாங்காங் பங்கு சந்தை குறியீடான HANG SENG, 25 ஆயிரத்து 918 புள்ளிகளுடனும், சீன பங்கு சந்தை குறியீடான Shaz, 2 ஆயிரத்து 905 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.

Exit mobile version