இன்றைய பங்கு சந்தை நிலவரங்கள்

இந்திய பங்கு சந்தைகள் உயர்வுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன…

மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 160 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து, 38 ஆயிரத்து 386 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது. இதேபோல், தேசியப் பங்குச் சந்தை குறியீடான நிப்டி 40 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து, 11 ஆயிரத்து 382 புள்ளியாக வர்த்தகமாகி வருகிறது. உலகப் பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகின்றன.

அமெரிக்கப் பங்குச் சந்தை குறியீடான நாஸ்டேக் 8 ஆயிரத்து 48 புள்ளிகளுடனும், லண்டன் பங்குச் சந்தை குறியீடான FTSE 7 ஆயிரத்து 215 புள்ளிகளுடனும், பிரான்ஸ் பங்குச் சந்தை குறியீடான CAC 5 ஆயிரத்து 643 புள்ளிகளுடனும் வர்த்தகமாகி வருகிறது.

ஜெர்மனி பங்குச் சந்தை குறியீடான DAX, 12 ஆயிரத்து 486 புள்ளிகளுடனும், ஜப்பான் பங்குச் சந்தை குறியீடான NIKKEI, 22 ஆயிரத்து 192 புள்ளிகளுடனும் வர்த்தகமாகி வருகிறது. ஹாங்காங் பங்குச் சந்தை குறியீடான HANG SENG, 26 ஆயிரத்து 506 புள்ளிகளுடனும், சீனப் பங்குச் சந்தை குறியீடான Shaz, 2 ஆயிரத்து 991 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.

Exit mobile version