இந்திய பங்குச்சந்தை முதல் உலக பங்குச்சந்தை வரையிலான நிலவரம்
மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 126 புள்ளிகள் உயர்ந்து, 37 ஆயிரத்து 397 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது. இதேபோன்று, தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி, 22 புள்ளிகள் உயர்ந்து, 11 ஆயிரத்து 58 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது.
அமெரிக்க பங்கு சந்தை குறியீடான நாஸ்டேக் 8 ஆயிரத்து 169 புள்ளிகளுடனும், லண்டன் பங்கு சந்தை குறியீடான FTSE 7 ஆயிரத்து 338 புள்ளிகளுடனும், பிரான்ஸ் பங்கு சந்தை குறியீடான CAC 5 ஆயிரத்து 618 புள்ளிகளுடனும் வர்த்தகமாகி வருகிறது.
ஜெர்மனி பங்கு சந்தை குறியீடான DAX, 12 ஆயிரத்து 359 புள்ளிகளுடனும், ஜப்பான் பங்கு சந்தை குறியீடான NIKKEI, 21 ஆயிரத்து 795 புள்ளிகளுடனும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. ஹாங்காங் பங்கு சந்தை குறியீடான HANG SENG, 27 ஆயிரத்து 65 புள்ளிகளுடனும், சீன பங்கு சந்தை குறியீடான Shaz, 3 ஆயிரத்து 14 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.