சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 240 ரூபாய் அதிகரித்து, 29 ஆயிரத்து 544 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
24 கேரட் தங்கத்தின் விலை, கிராம் ஒன்றுக்கு 30 ரூபாய் அதிகரித்து, 3 ஆயிரத்து 858 ரூபாய்க்கும், சவரனுக்கு 240 ரூபாய் அதிகரித்து, 30 ஆயிரத்து 864 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 30 ரூபாய் அதிகரித்து, 3 ஆயிரத்து 693 ரூபாய்க்கும், சவரனுக்கு 240 ரூபாய் அதிகரித்து, 29 ஆயிரத்து 544 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை கிராம் ஒன்றுக்கு 1ரூபாய் 60 காசுகள் அதிகரித்து 50 ரூபாய் 60காசுகளுக்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ஆயிரத்து 600 ரூபாய் அதிகரித்து 50 ஆயிரத்து 600 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.