இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வு

பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்றும் உயர்த்தப்பட்டுள்ளது. சர்வதேச கச்சா சந்தையில், கச்சா எண்ணெயின் விலை அதிகரித்ததை தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி, சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 17 காசுகள் அதிகரித்து, ஒரு லிட்டர் 73 ரூபாய் 45 காசுகளுக்கு விற்பனை ஆகிறது. டீசல் நேற்றைய விலையில் இருந்து 13 காசுகள் உயர்த்தப்பட்டு ஒரு லிட்டர் 69 ரூபாய் 70 காசுகளாக உள்ளது.

Exit mobile version