நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் முத்தலாக் மசோதா இன்று தாக்கல்

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் முத்தலாக் மசோதா இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. ஆனால் அதை தோற்கடிக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

இஸ்லாமியர்களிடையே நிலவும் உடனடி முத்தலாக் முறையை கிரிமினல் குற்றமாக கருதும் மசோதா கடந்த 17ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு 27ம் தேதி நிறைவேற்றப்பட்டது.மாநிலங்களவையிலும் நிறைவேற்றினால் மட்டுமே முத்தலாக் மசோதா சட்டவடிவம் பெறும். எனவே இன்று மாநிலங்களவையில் சட்டஅமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தாக்கல் செய்கிறார்.மாநிலங்களவையில் பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லாததால் எந்த அணியையும் சேராத கட்சி எம்.பிக்களின் ஆதரவை எதிர்பார்த்து மத்திய அரசு நம்பிக்கையுடன் உள்ளது.ஆனால் மாநிலங்களவையில் மசோதாவை தோற்கடிக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் தீவிரமாக உள்ளன. தற்போதைய வடிவத்தில் மசோதாவை நிறைவேற விடமாட்டோம் என்று எதிர்கட்சிகள் சூளுரைத்துள்ளன. முத்தலாக் மசோதாவை நாடாளுமன்ற கூட்டு தேர்வுக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பவும் எதிர்கட்சிகள் வற்புறுத்தி வருகின்றன.முன்னதாக காங்கிரஸ், திமுக, தேசியவாத காங்கிரஸ், தெலுங்கு தேசம், தெலங்கானா ராஷ்டிரிய சமீதி, பகுஜன் சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்கட்சிகள் முத்தலாக் மசோதாவை தோற்கடிப்பது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தின.

Exit mobile version